முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி கட்டாயம் கிடையாது: .பள்ளிக்கல்வித்துறை

ஞாயிற்றுக்கிழமை, 6 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி கட்டாயம் கிடையாது  என பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

நேற்றைய தினம் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் இணைய வழி கல்விக்கான வழிகாட்டுதல்களில் கூடுதலாக சில பக்கங்களை இணைத்து தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து அனைத்து தனியார் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்பு முறைகளை பின்பற்றி வருகின்றன. இதற்கிடையே, தேனி  மாவட்டம் ஆண்டிபட்டியில் விக்கரபாண்டி என்ற மாணவர் ஆன்லைன் வகுப்பு புரியாததால், தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் புரியாததால் தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, தற்கொலைகளை தடுக்க அனைத்து தரப்பினர் சார்பிலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கையையை தொடர்ந்து, அரசாணையில் மாணவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் கூடுதலான ஒரு உத்தரவை பள்ளிக்கல்வி ஆணையர் பிறப்பித்துள்ளார். 

அதாவது, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி கட்டாயம் இல்லை என்றும் 'அவர்களை ஆன்லைன் கல்வி கற்க வற்புறுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும், அவர்களுக்கு தேவையான உணர்ச்சிகரமான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா தொற்றின் வீரியத்தை மாணவர்கள் அறிய வேண்டும்,

அதற்கான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கிய பின்னர், மாணவர்களின் ஆரோக்கிய தன்மையை அறிய வேண்டும். அதன் பிறகே கற்பித்தலை தொடங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் - மாணவர் இடையே உள்ள இடைவெளியை குறித்து பரஸ்பர நல்லுறவை நிலைநாட்ட வேண்டும். பெற்றோர்களிடம் மாணவர்களின் நிலை குறித்து அறிய வேண்டும். சில வீடுகளில் செல்போன் வசதிகள் இல்லாமல் இருக்கலாம்.

அப்போது அந்த மாணவர்களின் வருகை பதிவு மற்றும் செயல்திறன் மதிப்பெண்களை கணக்கிடமாட்டாது என்பதை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உறுதிபட தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பள்ளிகளில் ஆன்லைன் கல்வி தொடர்பாக  மாவட்டந்தோறும் ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒரு கண்காணிப்பு ஆலோசகரை நியமிக்க வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து