முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை கோவில்களில் சாமி தரிசன முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம்

திங்கட்கிழமை, 7 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை கோவில்களில் சாமி தரிசன முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூறியுள்ளார். 

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்து 120 கோவில்கள் உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த 1-ந் தேதி பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன.சென்னையில் வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இணையதளத்தில் முன் பதிவு செய்யும் பக்தர்கள் ஆதார் அட்டை விவரத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு தரிசன நாள், நேரம் ஆகியவை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும்.

அந்த வசதியை பயன்படுத்தி ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகிறார்கள்.மேலும் இணையதளத்தில் பதிவு செய்யாமல் நேரில் வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கனை பெற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். 

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் ஆதார் அட்டை விவரத்தை கட்டாயம் அளிக்க வேண்டும். ஆண் பக்தர்கள் சட்டை அல்லது குர்தா, வேட்டி, பேண்ட் அணிந்து வர வேண்டும். பெண்கள் புடவை, பாவாடை,தாவணி, சுடிதார் உள்ளிட்ட பாரம் பரிய ஆடைகளை அணிந்து வரவேண்டும்.

முன்பதிவு செய்த நேரத்தை தாண்டி வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதை பக்தர்களுக்கு முன்பதிவு செய்யும் போதே குறிப்பிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து