முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளூர் மாவட்டத்தில் 40 சதவீதம் பேர் முக கவசம் அணியவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனை

திங்கட்கிழமை, 7 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 40 சதவீதம் பேர் முக கவசம் அணியவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனையோடு தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. இருப்பினும் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டத்தில் 12 புதிய திட்டப்பணிகளை தொடக்கி வைத்த முதல்வர் பழனிசாமி, 7,528 பயனாளிகளுக்கு ரூ.51.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டத்துக்கு தான் வரும் வழியில் 40 சதவீதம் மக்கள் முக கவசம் அணியவில்லை என்பதை பார்த்ததாக கவலையோடு தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மேலும், விவசாயிகளை உள்ளடக்கிய குடிமராமத்து பணிகளை செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து