முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1837 பதினெண்கீழ்க்கணக்கு பாடல்களின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 8 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1837 பாடல்களின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார். 

அம்மாவால் 13.9.2016 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும், இந்திய மொழிகளான மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். இப்பணிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். 

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசால் 15 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. மொழிபெயர்ப்பு பணிகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.

அவ்வகையில், முதற்கட்டமாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1837 பாடல்களின் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிபெயர்ப்பு நூல்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19.2.2019 அன்று வெளியிட்டார். 

அதன் தொடர்ச்சியாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1837 பாடல்களின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச்செயலாளர் சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் / உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் கோ.விசயராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து