முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் பன்வாரிலாலுடன் முதல்வர் எடப்பாடி சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 8 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்வதற்காக சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நேற் நடைபெற்றது. அதில், சட்டசபை கூட்டத்தொடரை 3 நாட்களுக்கு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று மாலை 5 மணி அளவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேச இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்,  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து