முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட்

புதன்கிழமை, 9 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்தது.

கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்களை திறக்க தடை நீடித்து வருகிறது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன.

இதற்கு தடை விதிக்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு இருந்தது. 

இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.

மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து