முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் வழக்கு வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 9 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் வழக்கை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்த ஐகோர்ட் நீதிபதிகள், அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட பா.ஜ.க.வை சேர்ந்த எஸ்.வி.சேகர், தேசிய கோடியை அவமதிக்கும் விதமாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார்.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையத்தில் எஸ்.வி. சேகருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்ற பிரிவு போலீசார் எஸ்.வி.சேகரிடம் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து முன் ஜாமீன் கோரி  சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி. சேகர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு விசாரணைக்கு வந்த போது, தேசிய கொடியை அவமதித்ததற்கு எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் அவரை கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து தேசிய கொடியை அவமதித்ததற்கு நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்தார். எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பான முன் ஜாமீன் வழக்கில் வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக சென்னை ஐகோர்ட்டில், காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் வழக்கை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து