உடல்நலக்குறைவால் நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

வியாழக்கிழமை, 10 செப்டம்பர் 2020      சினிமா
Vadivelu-Balaji 2020 09 10

உடல்நலக்குறைவு காரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 42 ஆகும். இவர் சின்னத்திரையில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஆவார். திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ள இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது மறைவு செய்தி சின்னத்திரை பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து