முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் இயங்கி வரும் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கொரோனா காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், 4-ம் கட்ட தளர்வுகளுடன்  செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்து, இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. 

பெட்ரோல் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து