ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் சேர்ந்த முதல் அமெரிக்க வீரர்

சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2020      விளையாட்டு
Ali-Khan 2020 09 12

Source: provided

சவுதி : அமெரிக்காவைச் சேர்ந்த 29 வயது அலி கான், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது.

துபாய், அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐ.பி.எல். அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐ.பி.எல். போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகிய ஹாரி கர்னிக்குப் பதிலாக அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலி கானைத் தேர்வு செய்துள்ளது

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் முதல் அமெரிக்க வீரர் என்கிற பெருமையை அலி கான் பெற்றுள்ளார்.

இந்த வருட சி.பி.எல். போட்டியில் சாம்பியன் ஆன டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று, 8 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து