பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக வந்த தகவலில் உண்மையில்லை: நடிகர் விஷால் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 13 செப்டம்பர் 2020      சினிமா
Vishal 2020 09 13

Source: provided

சென்னை : பா.ஜ.க.வில் நான் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் போன்றவற்றில் போட்டியிட்டு நடிகர் விஷால் வெற்றி பெற்றார். இதையடுத்து அரசியலிலும் கால்பதிக்க துடித்தார்.

அதன்படி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து விஷால் போராட்டத்தில் ஈடுபட்டது அப்போது பரபரப்பானது. 

இந்நிலையில் நடிகர் விஷால் பா.ஜ.க.வில் இணைய இருப்பதாகவும், பா.ஜ.க. தமிழக தலைவர் முருகனை சந்திக்க நேரம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியது. 

இதுகுறித்து நடிகர் விஷால் கூறுகையில், நான் பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை எனத் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து