முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மோடி என்னை பாராட்டினார் - டிரம்ப்

திங்கட்கிழமை, 14 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடி என்னை பாராட்டினார் என தேர்தல் பிரசாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3- ந் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது.இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கு இன்னும் 2 மாதமே இருக்கும் நிலையில் அதிபர் டிரம்ப் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள சில முக்கிய மாகாணங்களில் டிரம்பின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அங்குள்ள நேவாடா பகுதிகளில் அதிபர் டிரம்ப் அதிக நேரத்தை செலவிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேவாடாவின் ரெனோ பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது:-

இந்தியாவை விட அதிகம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து உள்ளோம். கொரோனா பரிசோதனையில் இந்தியா 2- வது இடத்தில் உள்ளது. நாங்கள் இந்தியாவை விட 44 மில்லியன் பரிசோதனைகளை அதிகமாக செய்துள்ளோம்.

அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்து கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பிரதமர் மோடி எனக்கு போன் செய்து என்னை பாராட்டினார்.

அமெரிக்காவில் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது தொடர்பாக மோடி கூறிய கருத்து ஊடகங்களுக்கு விளக்கப்பட வேண்டும். இது தொற்று நோயை நாம் கையாண்ட விதத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும்.

ஜோபிடன் பொறுப்பில் இருந்திருந்தால் கொரோனா வைரசுக்கு இன்னும் நூறாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இறந்து இருப்பார்கள். அமெரிக்காவில் கடந்த 4 ஆண்டுகளாக இழந்த வேலை வாய்ப்புகளை மீண்டும் உருவாக்கினேன். எல்லைகளை பாதுகாப்பதிலும், ராணுவத்தை பலப்படுத்துவதிலும் நேரத்தை செலவழித்தேன்.

ஜோபிடன் நம் நாட்டை வன்முறை கும்பலிடம் ஒப்படைக்க விரும்புகிறார். ஜோபிடன் வென்றால் சீனா வெற்றி பெற்று விடும். ஜோபிடன் வென்றால் அராஜகவாதிகள் வெற்றி பெற்று விடுவார்கள்.

இது ஒரு மோசமான தேர்தல். ஆனால் அதிபர் அரசியலின் வரலாற்றில் ஜோபிடன் மிக மோசமான வேட்பாளர்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து