மகாராஷ்டிராவில் மேலும் 371 காவலர்களுக்கு கொரோனா

செவ்வாய்க்கிழமை, 15 செப்டம்பர் 2020      இந்தியா
Guard-Corona 2020 09 15

Source: provided

மும்பை : மகாராஷ்டிராவில் மேலும் 371 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு  மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது.  கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மகாராஷ்டிராவில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 371 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் மகாராஷ்டிரா காவல்துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,756 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 8 போலீசார் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 15,830 காவலர்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 3,724 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து