தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி மகாராஷ்டிரா மாநில கவர்னருடன் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 15 செப்டம்பர் 2020      இந்தியா
Bhagat-Singh 2020 09 15

Source: provided

மும்பை : சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி மதன் சர்மா, மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை நேற்று சந்தித்தார்.

மும்பையில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா என்பவர், சிவசேனாவுக்கு எதிரான குறுஞ்செய்தியை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்தது தொடர்பாக கொலை மிரட்டல் வந்த நிலையில் கும்பல் ஒன்று அவரது வீட்டிற்கு சென்று அவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியது.

அவர்மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கூறப்படும் சிவசேனா தொண்டர்களான கம்லேஷ் கதம் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சட்டம் மற்றும் ஒழுங்கை கவனிக்க முடியவில்லை எனில் முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலகுங்கள் என தாக்கப்பட்ட கடற்படை அதிகாரி கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி மதன் சர்மா ராஜ்பவனில்  மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை நேற்று சந்தித்தார். அப்போது தான் தாக்கப்பட்டது பற்றி கவர்னரிடம் அவர் கூறியதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து