முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வரும் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ. வழக்கறிஞர் லலித் சிங் கூறுகையில், பாபர் மசூதி இடிப்பின் அனைத்து விசாரணைகளும் கடந்த  1-ம் தேதி முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதத் தொடங்கியுள்ளனர். 

இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் 351 சாட்சிகளும், 600-க்கும் மேற்பட்ட ஆவண ஆதாரங்களைளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.  இந்நிலையில், வழக்கின் தீர்ப்பானது வருகின்ற 30-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வழங்கவுள்ளது என கூறினார்.

இந்த வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து