ஐ.பி.எல். தொடருக்காக சிறப்பான வகையில் தயாராகியுள்ளேன்: உறுதிபட சொல்கிறார் ஹர்திக் பாண்ட்யா

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      விளையாட்டு
Hardik-Pandya 2020 09 16

Source: provided

மும்பை : கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்ட்யா, ஐ.பி.எல். தொடருக்காக சிறப்பான வகையில் தயாராகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா முகுதுப் பகுதியில ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் உடல்தகுதி பெற்று விளையாட தயாரானார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடர் வருகிற 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, ஒரு வருடம் விளையாடவில்லை என்பதால தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். 

இந்நிலையில் சிறந்த முறையில் ஐ.பி.எல். தொடருக்கு தயாராகியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில்,

தற்போது நான் பந்தை அடிப்பதை வைத்து பார்க்கும் போது நல்ல ஷேப் மற்றும் மனநிலையை பெற்றுள்ளேன். நான் களத்தில் இறங்கி எவ்வளவு நேரம் நிலைத்து நிற்கிறேன் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். என்னுடைய எண்ணம் சிறப்பான முறையில் வெளிப்படும் என நினைக்கிறேன்.   நான் எவ்வளவு தூரம் போட்டியுடன் செல்கிறேன்.

எவ்வளவு நாட்கள் போட்டியில் இருந்து விலகி இருக்கிறேன் என்பது விஷயம் இல்லை. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பும்போது, அது மதிப்பிற்குரியதாக இருக்க வேண்டும்.

நான் சிறப்பான முறையில் தயாராகி உள்ளேன். சிறப்பான விசயங்கள் முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து