முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவில் இருந்து குணமடைந்த 10 பேரில் ஒருவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டியுள்ளது: ஆய்வில் தகவல்

வியாழக்கிழமை, 17 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

கொரோனாவில் இருந்து குணமடைந்த 10 பேரில் ஒருவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டியுள்ளது என்று அமெரிக்க ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகும் நபர்கள் குறைந்தது 14 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டி இருக்கிறது. கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். 

இந்த நிலையில் அமெரிக்காவில் அவசர மருத்துவம் தொடர்பான பத்திரிகை நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் 10 நோயாளிகளில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அனுப்பப்பட்ட பின்னர் ஒரு வாரத்துக்குள் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு திரும்ப வேண்டிய சூழல் உள்ளதாக தெரியவந்துள்ளது. காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வருவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை 1,400 நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து