முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் கொரோனாவின் 2-வது அலை தவிர்க்க முடியாதது: போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 3.06 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்து விட்டனர். மிக அபாயகரமான இந்த வைரசைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இங்கிலாந்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், 

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சமூக விலகல் விதிகளுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிய மூன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். 

முன்னதாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பொது நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து