சாரட் வண்டியில் பயணம்: தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் மீது வழக்குப்பதிவு

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      தமிழகம்
Murugan 2020 09 19

Source: provided

சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளையொட்டி கடந்த வியாழன்று சென்னையில் தமிழக பா.ஜ.க. சார்பில் கட்சியின் தலைவர் எல். முருகன் சென்னை தி.நகரில் 70 அடிக்கு கேக் வெட்டியதுடன் சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்றார்.   

இந்நிலையில் கொரோனா காலத்தில் தடையை மீறி அனுமதியின்றி சாரட் வண்டியில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பா.ஜ.க. மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து மாநில தலைவர் எல்.முருகன் உள்பட 100 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் மாம்பலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து