கர்நாடக துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      இந்தியா
Ashwat-Narayan 2020 09 19

Source: provided

பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  அவரது அரசில் துணை முதல்வராக  அஷ்வத் நாராயண் இருந்து வருகிறார்.  இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதுபற்றி அஷ்வத் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், சட்டசபை கூட்டத்தொடர் வரவுள்ள நிலையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.  அதன் முடிவு வெளிவந்துள்ளது.  அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

எனக்கு அறிகுறிகள் எதுவுமில்லை.  நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொள்வேன்.  என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளும்படி வேண்டி கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து