முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரும், துணை முதல்வரும் ராமர் - லட்சுமணரை போன்றவர்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ராமர் லட்சுமணன் போல புரிதல் உள்ள உதாரண புருஷர்களாக  முதல்வர் எடப்பாடியாரும்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் திகழ்கிறார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டினார்.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலத்தில் கொரோனா  தடுப்பு பணி குறித்து அதிகாரிகளுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு நடத்தினார். மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த 276 களப்பணியாளர்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல உதவி ஆணையர் தேவேந்திரன் வரவேற்றார்.  ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மாதவரம்வி.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.,கே.குப்பன், டி.எஸ்.பி.,ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முடிவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பத்திரிகையாளர்களுக்கு அளித்த  பேட்டி வருமாறு,

இந்தியா உள்பட 220   நாடுகளின்  மக்கள் அச்சுறு த்தி வந்த கொரோனா தொற்று வைரசுக்கு எதிராக மனித குலமே போராடி கொண்டிருக்கிறது. இந்த அசாதாரன சூழ்நிலையில் தமிழக முதல்வர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று என்பது  கட்டுக்குள் உள்ளது.

தலைநகரில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு  மருத்துவர்கள் அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றியதால் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 165 பரிசோதனை மையங்களில் நேற்று 85,543 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு இதில் 5,526 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது 10 சதவீதக்கும் கீழ் தான் தமிழகம் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை 64 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, அதில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 908 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு,  தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டதால் 4 லட்சத்து  75 ஆயிரத்து 713 பேர் குணமடைந்து பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். 

இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே  சளி இருக்கிறதா இருமல் இருக்கிறதா என்று கேட்டு கேட்டு  வீடு வீடாக பரிசோதனை செய்த ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான். வளர்ந்த நாடுகளில் கூட யாரும் இந்த அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளவில்லை.

தமிழகத்தில் மக்கள் சேவை மூலம் நம்பிக்கை பெற்ற  ஒரே கட்சி அதிமுகதான். அதிமுகவில் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் இருக்கத்தான் செய்யும். ஆரோக்கிய நிலையை உருவாக்கத்தான் ஆலோசனை நடைபெற்றது.

 ராமன் லட்சுமணனுக்கு இடையே  உள்ள புரிதல் எப்படியோ  அதே போல் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே இருக்கிறது. அதிமுக ராணுவ கட்டுபாடோடு உள்ளது   முதல்வர் வேட்பாளர்  குறித்து பேசக்கூடாது என்று தலைமை  அறிவுறுத்தி உள்ளது.

அதிமுகவில் கூட்டணி வலுவாக இருக்கிறது கூட்டணி கட்சி என்றாலும்  அவரவர் கருத்தை சொல்ல த்தான் செய்வார்கள்.அவரவர் விருப்பத்தை சொல்ல எந்த தடை உத்தரவும் போட முடியாது அதற்கான ஒப்பந்தத்தையும் நாங்கள் போடவில்லை. 

இன்னும் ஆறுமாதத்தில் அதிமுகவினரின் கொட்டம் அடங்கி விடும் என்று உதயநிதி பேசி வருகிறார் பொதுவாழ்க்கையில்  உதயநிதி உரிய நாகரீகத்தோடு பேச வேண்டும் அதற்காக உதயநிதிக்கு  அவரது தந்தையும் திமுக தலைவருமான ஸ்டாலின்  பயிற்சி அளிக்க வேண்டும்.  இப்படி பேசுவது உதயநிதியின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் நல்லதல்ல என்பதை அறிவுரையாக அல்ல! ஒரே சகோதரனாக கூறுகிறேன். 

இதே போல்தொடர்ந்து உதயநிதி பேசினால் அதிமுகவினரும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஆகவே உதயநிதி பொது இடங்களில் அநாகரீகமாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து