மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை: ரெய்னா

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      விளையாட்டு
Raina 2020 09 19

Source: provided

பதான்கோட் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துகள். நான் அங்கு இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ள  ஐ.பி.எல். போட்டி, நவம்பா் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. துபாய், அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின. 

பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் ரெய்னாவின் உறவினா்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

இதையடுத்து, இந்த வருட ஐ.பி.எல். போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். மேலும், சொந்தக் காரணங்களுக்காக மற்றொரு சி.எஸ்.கே. வீரரான ஹர்பஜன் சிங்கும் ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் ரெய்னா தெரிவித்ததாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துகள். நான் அங்கு இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. எனினும் என்னுடைய எல்லா வாழ்த்துகளும் உங்களிடம் உள்ளன. நல்ல உணர்வுகளை உங்களுக்கு அனுப்புகிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து