முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனேயில், இன்று முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புனே : புனேயில், இன்று முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை, புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்க உரிமம் பெற்று உள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனையை அந்த நிறுவனம் முடித்து விட்டது.  

இதைத்தொடர்ந்து புனேயில் உள்ள சசூன் அரசு பொது மருத்துவமனையில் 3-ம் கட்ட பரிசோதனைக்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் தொடங்கி உள்ளது.

இதற்காக நேற்று முன்தினம் முதல் தன்னார்வலர் பதிவு நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் தொடங்கியது. இதில் 150 முதல் 200 வரையிலான தன்னார்வலர்கள் தேவைப்படும் நிலையில், இதற்காக ஏற்கனவே பலர் முன்வந்துள்ளனர்.  இந்த நடவடிக்கைகளை முடித்து பெரும்பாலும் இன்று (திங்கட்கிழமை) முதல் 3-ம் கட்ட பரிசோதனை தொடங்கும் என இன்ஸ்டிடியூட் வட்டாரங்கள் தெரிவித்தன. 

முன்னதாக இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இந்த தடுப்பூசியின் பரிசோதனை நடவடிக்கைகளை அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் நிறுத்தி வைத்தது.

எனவே இந்தியாவிலும் இந்த தடுப்பூசி பரிசோதனைகளை நிறுத்துமாறு கடந்த 11-ம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அறிவுறுத்தி இருந்தார். பின்னர் மீண்டும் 15-ம் தேதி முதல் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து