முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே நேற்று அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு நேற்று காணொலி காட்சி வழியே அடிக்கல் நாட்டினார்.  இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கலந்து கொண்டார். 

இதேபோன்று பீகாரில் 45,945 கிராமங்கள் இன்டர்நெட் வசதி பெறும் வகையிலான கர்தக் என்ற கண்ணாடி இழை வழியே இன்டர்நெட் சேவை வழங்கும் திட்டத்தினையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். 

பீகாரில் ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதாதள கட்சியுடன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து உள்ளது.  வருகிற அக்டோபரில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 

இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.  பாராளுமன்ற மேலவையில் தாக்கல் செய்யப்பட்ட 2 வேளாண் மசோதாக்கள் மீது நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின்போது அவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பிரையன் உள்பட பலர் அவை மைய பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். 

அதனுடன், அவை துணை தலைவர் ஹரிவன்ஷிடம் ஆவேசமுடன் பேசி, எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பி அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தினர்.  எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, அவையில் தாக்கலான 2 வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டன. 

தனை குறிப்பிட்டு பேசிய நிதீஷ்குமார், உங்களது பார்வைகளை முன்வைக்க என்று சில வழிகள் உள்ளன.  ஆனால், பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது.  பாராளுமன்ற மேலவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் வேளாண் பிரிவுக்கு சாதகம் ஆனவை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து