முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவிலிருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகன்

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : கொரோனா பாதித்து குணமடைந்த பிறகும், தொற்று பாதிப்புக் காரணமாக, பெற்ற தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மகன் மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக தங்களது நெருங்கிய உறவுகளைக் கூட நெருங்க விடாமல் செய்யும் சில மனிதாபிமானமற்ற நபர்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது. 

முதியோர் இல்லத்தில் வசித்து வந்த பாலாமணி கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பூரண குணம் பெற்று, கொரோனா தொற்று இல்லை என கடந்த வாரம் பரிசோதனையில் தெரிய வந்ததை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அவரது மகனுக்கு செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தகவல் சொல்ல முயற்சித்தது.

ஆனால் அது தோல்வியில் முடிந்தது  இறுதியாக மருத்துவமனையே பாலாமணியை அவரது வீட்டு வாசலில் கொண்டு வந்து விட்டு விட்டுப் போய் விட்டது.

ஆனால் தனது தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மகன் மறுத்து விட, கொரோனா தொற்றுக் காரணமாக முதியோர் இல்லமும் மூடப்பட்டதால் செல்ல வழியின்றி, வீட்டின் எதிரில் உள்ள காலியிடத்தில் தங்கியிருக்கிறார் பாலாமணி. 

வீட்டில் இருந்தால் அக்கம் பக்கத்தினர் கேட்பார்களே என்று அஞ்சி, மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக இருக்கும் பாலாமணியின் மகன், வீட்டை வெளியே பூட்டி விட்டு, தனது மனைவி, பிள்ளைகளுடன் வெளியே சென்று விட்டார். 

இது குறித்து தகவல் அறிந்த மூத்த நீதிபதி கிரண்மயி, தேவையான உதவிகளை அளிப்பதாக பாலாமணிக்கு உறுதிமொழி அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து