சி.எஸ்.கே. போட்டிக்கு அஸ்வின் தயாராகி விடுவார்: ரிக்கி பாண்டிங்

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      விளையாட்டு
Ricky-Ponting 2020 09 21

Source: provided

துபாய் : பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த அஸ்வின் 25 - ம் தேதி சென்னை அணிக்கெதிரான போட்டிக்கு தயாராகி விடுவார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. டெல்லி அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட் வீழ்த்தினார். என்றாலும் அந்த ஓவரின் கடைசி பந்தை ரன் எடுக்க விடாமல் தடுக்க கிழே விழுந்தார். அப்போது அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் உடனடியாக வெளியேறினார். அதன்பின் பந்துவீசவில்லை. காயத்தால் அடுத்த போட்டியில் களம் இறங்குவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் 25 - ந் தேதி சி.எஸ்.கே. அணிக்கெதிராக நிச்சயம் விளையாடுவார் என்று டெல்லி அணி தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறியிருப்பதாவது :-

அஸ்வினுக்கு ஏற்பட்ட காயம் பற்றி விரைவில் கண்டறிவோம். சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. போட்டியை நாங்கள் தொடங்கிய பிறகு, கடுமையாக போரிட்டது த்ரில் ஆன விசயம். ஸ்டாய்னிஸ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும், ரபடா சூப்பர் ஓவரிலும் அசத்தினர் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து