முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் சிறப்பானவை: பிரதமர் மோடி பெருமிதம்

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் சிறப்பானவை  என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். 

பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 

நாடு முழுவதும் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறையும் அரசு கொள்முதல் நிலையங்களும் தொடரும்.  எப்பொழுதும் போல் வேளாண் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும். தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு விவசாயத் துறையை மறு சீரமைக்கவே மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை கொண்டு வந்துள்ளது.

கொரோனா போன்ற பெருந்தொற்று காலகட்டத்திலும் கூட வரலாற்றில் இல்லாத அளவிற்கு வேளாண்ப் பொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. அதிக அளவிலான பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

மேலும், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் முக்கியமானவை ஆகும். விவசாய சீர்திருத்தங்களின் பயன்களை ஏற்கனவே விவசாயிகள் அனுபவிக்கத் தொடங்கி விட்டனர். பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 25 சதவீதம் கூடுதல் விலை கிடைத்துள்ளது. வேளாண் சட்டங்களால் விளைபொருட்கள் சந்தைகள் மூடப்பட மாட்டாது.

வேளாண் சந்தைகள் மூடப்பட்டு விடும் என்று எதிர்க்கட்சியின் கூறுவது பொய். வேளாண் சட்டம் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கும் சுதந்திரமாக வர்த்தகம் செய்யலாம். இவ்வாறு பிரதமர்  மோடி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து