சோனியாகாந்தி நாடு திரும்பினார்

செவ்வாய்க்கிழமை, 22 செப்டம்பர் 2020      இந்தியா
Sonia Gandhi 2020 09 22

Source: provided

புதுடெல்லி : மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியா திரும்பினார். 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த அவர் வெளிநாட்டில் 2 வாரங்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து கொண்டு பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார் என்றும் அதன்பின்னர், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.   

சோனியா காந்தியின் வெளிநாட்டு பயணத்தில் அவரது மகன் ராகுல் காந்தியும் சென்றிருந்தார். அவரும் நாடு திரும்பிய பின்னர் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து