இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகல்

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      விளையாட்டு
Chris-Cyrillo 2020 09 23

Source: provided

மும்பை : இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பகுத்தாய்வு பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகி உள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி வரும் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பகுத்தாய்வு பயிற்சியாளராக (ஆட்ட திறன் குறித்து ஆய்வு செய்பவர்) பணியாற்றிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் சிரில்லோ உடல் நலக்குறைவு காரணமாக அந்த பதவியில் இருந்து விலகி இருக்கிறார். 

இது இந்திய ஆக்கி அணிக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே உயர் திறன் இயக்குனர் டேவிட் ஜான், பிசியோதெரபிஸ்ட் டேவிட் மெக்டொனால்டு (இருவரும் ஆஸ்திரேலியா) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து