ரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா? -சி.எஸ்.கே. அணி சி.இ.ஒ. விளக்கம்

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      விளையாட்டு
Raina 2020 09 26

Source: provided

துபாய் : ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ள சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  நடப்பு ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது.

ஆனால், அடுத்த இரு ஆட்டங்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால், ஏமாற்றம் அடைந்த சென்னை அணி ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில், சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஐ.பி.எல். தொடரில் இருந்து ரெய்னா தானாகவே விலகியுள்ளார்.

எனவே, அவரது தனிப்பட்ட முடிவுகளுக்கு  மதிப்பளிக்க வேண்டும்.  எனவே,  அது (ரெய்னாவை மீண்டும் இடம் பெறச்செய்வது) குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து