முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி துணை முதல்வர் உடல் நிலையில் முன்னேற்றம்

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வர்  மனிஷ் சிசோடியா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, கடந்த 14-ம் தேதி கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் வீட்டில் தன்னை  தனிமைப்படுத்திக் கொண்டார்.

இருப்பினும்,  அவருக்கு காய்ச்சல் மற்றும் சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டதால் லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில்  கடந்த 21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் அங்கிருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில், அடுத்தகட்ட சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சலும் இருப்பது  தெரியவந்தது. 

மருத்துவர்கள் மனிஷ்  சிசோடியாவை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.  ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்ட மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதன்பலனாக அவரது உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, சாதாரண வார்டுக்கு மனிஷ் சிசோடியா விரைவில் மாற்றப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து