முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டாக்டர் வி.மைத்ரேயனின் மூத்த சகோதரி மறைவுக்கு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டாக்டர் வி.மைத்ரேயனின் மூத்த சகோதரி மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டாக்டர் வி.மைத்ரேயனின் மூத்த சகோதரி வி.மாலினி மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

பாசமிகு சகோதரியை இழந்து வாடும் அன்பு சகோதரர் டாக்டர் மைத்ரேயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துகொள்வதுடன் மாலினியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து