முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சலில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

சிம்லா : இமாச்சலில் ஏற்கனவே 7 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இமாச்சலில் ரோஹிரு தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான லால் பிரக்தா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இதில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின்படி மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இது குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 12 நாள்களாக சிம்லா பகுதியில் எந்த பொதுநிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. 

எனினும் எனது வீட்டிற்கு வந்து என்னை சந்தித்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இமாச்சலில் இதுவரை 6 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து