முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் : ரிக்டரில் 4.5 ஆக பதிவு

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று மதியம் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.5 ஆக பதிவான நில நடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாரமுல்லா மாவட்டத்தின் குல்மர்க் பகுதியை மையமாகக் கொண்டு நேற்று மதியம் 12.05 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.   

பாரமுல்லாவின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.   

சில நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கம் காரணமாக பாரமுல்லா பகுதியில் அமைந்துள்ள பல்வேறு கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் மக்கள் சற்று பதற்றம் அடைந்தனர். 

ஆனாலும், நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து