முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்கத்தில் துர்கா பூஜையையொட்டி புடவை அணிவிக்கப்பட்ட ரோபோ

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்குவங்கத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு ரோபோவிற்கு மக்கள் புடவை அணிவித்த நிகழ்வு பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இந்து மதப் பண்டிகையான துர்கா பூஜை நாடு முழுவதும் அக்டோபர் 22-ம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.  நாட்டில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்து வரும் நிலையில், நான்காம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், ஒருசில மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தை மக்கள் வரவேற்கத் துவங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரோபோவுக்கு புடவை அணிவிக்கப்பட்டுள்ளது. 

புதியதாக வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தின் தன்மை குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே துர்கா பூஜையையொட்டி அதற்கு புடவை அணிவித்துள்ளது பார்வையாளர்களை வெகுவாக கவரந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து