திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      இந்தியா
Tirupati 2020 09 09 26

Source: provided

திருப்பதி : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அக்டோபர் மாதத்திற்கான ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவுக்காக வெளியிடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் ஆர்ஜித சேவைகள் தரிசனங்கள் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்தது. 

ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தினசரி வைபவங்கள் வழக்கம்போல் நடத்தப்பட்டு வந்தன.  கடந்த ஜூன் மாதம் முதல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 

இதற்காக தேவஸ்தானம் இணையதளம் மூலம் விரைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன் படி அக்டோபர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுக்கள் நேற்று காலை வெளியிடப்பட்டது. 

தற்போது தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து