முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில்  14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, திருவாரூர், சிவகங்கை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,  மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

எஞ்சிய கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக் கூடும்.  அடுத்த 48 மணி நேரத்தில் சேலம், கிருஷ்னகிரி, தருமபுரி, மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

திருத்துரைப்பூண்டி, கோவில்பட்டி, மதுக்கூரில் தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மன்னார் வளைகுடா, வங்கக்கடலின் மத்திய கிழக்கு, தென்மேற்கு பகுதி, அந்தமான் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும். மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு 2 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து