பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020      உலகம்
World-Health 2020 09 29

Source: provided

ஐ.நா : பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்குக் கொரோனா மருத்துவப் பரிசோதனை உபகரணங்களை வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறியதாவது, 

“அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கொரோனாவுக்கு இரு வகையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. பிசிஆர் சோதனை மாதிரி இல்லாமல் இவை 15 முதல் 30 நிமிடங்களில் முடிவைத் தருகின்றன. இம்மாதிரியான விரைவான முடிவுகள் கொரோனா பரவலைத் தடுக்கும்.

மேலும், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டவர்களையும் விரைவில் கண்டறியலாம். எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய 133 நாடுகளுக்கு இம்மாதிரியான கொரோனா மருத்துவப் பரிசோதனை உபகரணங்களை வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் சுமார் 3.4 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்குப் பலியாகினர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து