முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வர வேண்டும் என்று தேவஸ்தான தலைவர் வாசு கூறியுள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் மாதம் தொடங்கும் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் ஐப்பசி மாத பூஜைகளையொட்டி சாமி தரிசனத்துக்கு அய்யப்ப பக்தர்களை அனுமதிப்பது. கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில்  முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்தது.

இந்த கூட்டத்தில் தேவஸ்தான துறை மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன், சுகாதார துறை மந்திரி கெ.கெ.சைலஜா, போக்குவரத்து துறை மந்திரி ஏ.கே.சசீந்திரன், மின்சார துறை மந்திரி எம்.எம். மணி, நீர் வளத்துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி, திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவர் வாசு கூறியதாவது:-

மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி தினசரி குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்படும். நெய் அபிஷேகம் நடைபெறாது.

அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்தும், ஐப்பசி மாத பூஜையின் போது பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிப்பது குறித்து தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான உயர் மட்ட அதிகாரிகள் குழு முடிவு செய்து அறிக்கை தாக்கல் செய்வார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநில மந்திரிகளுடன் ஆன்லைன் மூலம் கலந்தாலோசித்து பக்தர்கள் தரிசனம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

கொரோனா தொற்று பாதித்த பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்காக நிலக்கல் உள்பட பல்வேறு இடங்களில் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்படும். பக்தர்கள் தரிசனம் முடிந்த உடன் மலை இறங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

கூட்டம் கூடாத வகையில் சிறிய வகையில் அன்னதானம் நடத்தலாம். சபரிமலை துப்புரவு பணிகளுக்கு சானிட்டேசன் சொசைட்டி மூலமாக தமிழ்நாட்டில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் அமர்த்தப்படுவார்கள். கேரள அரசு பஸ்களில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இந்த ஆண்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

மண்டல, மகர விளக்கையொட்டி நடத்தப்படும் தங்க அங்கி, திருவாபரண ஊர்வலங்கள் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி நடத்தப்படும். 10 வயதிற்கு குறைவான பக்தர்களும், 65 வயதிற்கு மேலான பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து