முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோமுகி நதி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் எடப்பாடி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கோமுகி நதி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி நதி அணையிலிருந்து 2020-2021-ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பழைய பாசன நிலங்கள் 5,860 ஏக்கரும், புதிய பாசன நிலங்கள் 5,000 ஏக்கரும், ஆக மொத்தம் 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு கோமுகி நதி அணையிலிருந்து 1.10.2020 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து