2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020      இந்தியா
Delhi-High-Court 2020 09 29

Source: provided

புதுடெல்லி : 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 

இந்தியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில் 2ஜி முறைகேடு வழக்கும் ஒன்று. 2-ஜி அலைகற்றை ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. 

இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அனைவரையும் சி.பி.ஐ கைது செய்து ஜெயிலில் அடைத்தது. பினனர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். 

இந்த வழக்கு சி.பி.ஐ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு, இறுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீ்ர்ப்பில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் குற்றவாளிகள் அல்ல என கோர்ட் விடுதலை செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரி சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வருகிற 5-ந்தேதி முதல் தினமும் 2ஜி வழக்கு விசாரிக்கப்படும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து