முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ளும் ரஷ்ய அதிபர் புடின்

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் புடின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னை, ரஷ்ய அதிபர் புடின் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், மூன் ஜே இன்னை சந்திப்பதற்கு முன் புடின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை தனக்குச் செலுத்த இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை. ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து முதல் தடுப்பு மருந்தைத் தயாரித்தது. இதற்கு ஸ்புட்னிக்-5 எனப் பெயரிட்டு கடந்த மாதம் பதிவு செய்தது. 

மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் ரஷ்ய அதிபர் புடின் செலுத்தினார். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். 

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவில் கொரோனாவால் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 11,59,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து