முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நிலையில் முன்னேற்றம் : அதிபர் டிரம்ப் டிஸ்சார்ஜ்

திங்கட்கிழமை, 5 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் அதிபர் டிரம்ப் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு அமெரிக்க வல்லரசின் அதிபர் டிரம்பும் ஆளாகி உள்ளார். 74 வயதான அவருக்கும், 50 வயதான அவருடைய மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 1-ம் தேதி உறுதியானது, உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

மேலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்குதல் டிரம்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது தேர்தல் பிரசாரமும் முடங்கியது.

முதலில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிகிச்சை பெற்ற டிரம்ப், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 2-ம் தேதி பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, சேர்க்கப்பட்டார். அங்கு விரைவில் குணம் அடைவதற்கு வசதியாக அவருக்கு ‘ரெம்டெசிவிர் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், சிகிச்சைக்கு மத்தியில் டிரம்ப், மருத்துவமனை முன்பாக உள்ள சாலையில் காரில் பயணித்தார்.  அப்போது அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். டிரம்ப் திடீரென வெளியே வந்தது அவரது ஆதரவாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து