முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 68 லட்சமாக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.   தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 68 லட்சத்தை கடந்துள்ளது.  குறிப்பாக இந்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 76 ஆயிரத்து 737 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 56 லட்சத்து 92 ஆயிரத்து 677 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 77 லட்சத்து 88 ஆயிரத்து 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 785 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.  கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 45 ஆயிரத்து 828 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 2 கோடியே 68 லட்சத்து 58 ஆயிரத்து 641 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா - 55,86,704 பேரும், அமெரிக்கா - 48,90,228 பேரும், பிரேசில் - 42,95,302 பேரும், ரஷ்யா - 9,82,324 பேரும்,  கொலம்பியா - 7,66,300 பேரும்,  பெரு - 7,12,888 பேரும்,  அர்ஜெண்டினா - 6,49,017 பேரும்,  தென் ஆப்ரிக்கா - 6,15,684 பேரும் உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து