முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா கட்டுப்படுத்தல் எதிரொலி: பிலிப்பைன்ஸில் பள்ளிகள் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மணிலா : கொரோனா வைரசுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் அரசு வெற்றி கண்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் கல்வித்துறைச் செயலாளர் லியோனர் பிரியோ கூறும் போது, 

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் திங்கட்கிழமை முதல் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமானமாவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக பிலிப்பைன்ஸ் அறியப்பட்டது. 

இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் சீனாவுக்கே முதலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்தது.  சர்வதேச அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் பிரேசிலும் , 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.

உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து