முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓமனிலிருந்து இந்தியாவிற்கு இன்று முதல் விமான சேவை தொடக்கம்

புதன்கிழமை, 7 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

ஓமன் : ஓமனில் இருந்து இந்திய நகரங்களான டெல்லி, மும்பை மற்றும் கொச்சினுக்கு இன்று 8-ம் தேதி முதல் விமான சேவையை தொடங்குவதாக ஓமன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஓமன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

அக்டோபர் 8 முதல் ஓமனிலிருந்து டெல்லிக்கு திங்கள்கிழமையும், டெல்லியில் இருந்து ஓமனுக்கு புதன்கிழமையும் விமான சேவை இயக்கவுள்ளது.  ஓமனிலிருந்து மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமையும், அங்கிருந்து ஓமனுக்கு வியாழக்கிழமையும் விமான சேவை அறிவித்துள்ளனர். 

மஸ்கட்டிலிருந்து கொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமையும், மஸ்கட்டுக்கு வியாழக்கிழமையும் இயக்க உள்ளனர்.   மேலும் இந்த அட்டவணையின்படி,  8-ம் தேதி முதல் 24 வரை விமான சேவை இயாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து