முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்பை விளாசிய கமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்களிடையே நேருக்கு நேர் நடந்த விவாதம்

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் இடையே நேற்று நேருக்கு நேர் காரசார விவாதம் நடைபெற்றது. 

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஏற்கனவே அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோபிடன் ஆகியோர் நேருக்கு நேர் விவாதம் நடத்தினர். இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் இடையே நேற்று நேருக்கு நேர் காரசார விவாதம் நடைபெற்றது.   இந்த விவாதத்தில் கலந்து கொண்ட மைக் பென்ஸ் கூறியதாவது:-

கொரோனா என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளோம். அமெரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா உயிரிழப்புகளை குறைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பே டிரம்புக்கு முதன்மையானது. ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் வரிச்சலுகைகளை பறித்து விடுவார் என்று கூறினார். 

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட கமலா ஹாரீஸ் பதிலளிக்கும் போது கூறியதாவது:-

டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான செயல்திட்டம் இல்லை. அதிபர் டிரம்பின் தோல்வியை மக்கள் பார்த்து கொண்டுள்ளனர். கொரோனாவிற்கு நாடு முழுவதும் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் அரசின் மோசமான முடிவுகளால் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது. இவ்வாறு கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து