முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் சர்வதேச குதிரை பந்தயம் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

துபாய் ஜெபல் அலி பகுதியில் வரும் 30-ம் தேதி முதல் நடைபெறும் குதிரை பந்தயத்திற்காக பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அமீரக பந்தய ஆணையத்தின் சார்பில் ஆண்டுதோறும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச குதிரைபந்தயங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான குதிரை பந்தய போட்டிகள் வருகிற 29-ம் தேதி முதல் அமீரகத்தில் தொடங்குகிறது. துபாய் மெய்தான், அபுதாபியில் குதிரைபந்தய கிளப், ஜெபல் அலி குதிரை பந்தய மைதானம், சார்ஜா குதிரையேற்றம் மற்றும் பந்தய கிளப், அல் அய்ன் குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் வெவ்வேறு நாட்களில் நடைபெற உள்ளது. 

அல் அய்ன் பகுதியில் முதல் குதிரை பந்தயம் வருகிற 29-ம் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து துபாயின் ஜெபல் அலி பகுதியில் 30-ம்  தேதி குதிரை பந்தயம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் வரை பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இந்த போட்டிகளில் ஜெபல் அலி குதிரை பந்தய மைதானத்தில் 13 போட்டிகள் வெவ்வேறு நாட்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்காக குதிரை பந்தய மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.  இதில் துபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள குதிரை பந்தய மைதானத்தில் பாதை அமைக்கும் மறுசீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் புதிதாக மண் கொட்டப்பட்டு குதிரை ஓடு பாதைகள் சமப்படுத்தப்பட்டு வருகிறது.  இதில் கட்டிங் எட்ஜ் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 1990-ம் ஆண்டு முதல் ஜெபல் அலி குதிரை பந்தய மைதானம் செயல்பட்டு வருகிறது. தற்போது குதிரை பந்தய பாதைகள் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் பணிகள் நிறைவடைந்ததும் அமீரக பந்தய ஆணையத்தின் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து