முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 9 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : ஆன்லைன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது.  அதற்கான பிரசார பணிகளில் அதிபர் டிரம்ப் மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் ஆகியோர் தீவிரமுடன் உள்ளனர். 

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்  டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் கலந்து கொள்ளும் 2-வது விவாத நிகழ்ச்சி வருகிற 15-ம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே, டிரம்ப் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வெள்ளை மாளிகை திரும்பி உள்ளதால், இந்த விவாத நிகழ்ச்சியை ஆன்லைன் வாயிலாக நடத்த விவாத நிகழ்ச்சியை நடத்தும் கமிட்டி பரிசீலித்து வருகிறது.  

இந்நிலையில், வருகிற 15-ம் தேதி ஆன்லைனில் விவாத நிகழ்ச்சி நடந்தால் அதில் பங்கேற்க மாட்டேன் என்றும், ஆன்லைன் விவாதத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து