கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தல்: மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல்: தேவகவுடா தகவல்

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020      இந்தியா
Devaguda 2020 10 12

Source: provided

பெங்களூரு : கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று தேவகவுடா தெரிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் வேட்பாளர்கள் நாளை 14-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். சிரா தொகுதி வேட்பாளரை நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம்.

ராஜராஜேஸ்வரிநகர் தொகுதிக்கு 3 பேரின் பெயர்களை நாங்கள் இறுதி செய்துள்ளோம். அதில் ஒருவரை வேட்பாளராக அறிவிப்போம். இந்த இடைத்தேர்தலில் எங்கள் கட்சியை வெற்றி பெற வைக்க நாங்கள் தீவிரமாக உழைப்போம். இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து